எத்தனை கோடிதான் கடன் சேர்ந்துக்கிட்டே போகும்!...உஷார் ஆன சிவகார்த்திகேயன்...

by சிவா |
sivakarthikeyan
X

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து மெரினா திரைப்படம் மூலம் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் வெற்றியால் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தது. தற்போது ரூ.30 கோடி சம்பளம் பெரும் நடிகராக மாறியுள்ளார்.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அப்படத்தின் தயாரிப்பாளர் ஃபைனான்சியர்களிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் பஞ்சாயத்து நடக்க, அந்த கடனை தான் ஏற்பதாக சிவகார்த்திகேயன் கையெழுத்து போட்ட பின்னரே அவரின்படங்கள் ரிலீஸாகி வருகிறது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் படத்தையும் சேர்த்து..

தற்போதும் சில கோடிகள் கடன்கள் அவருக்கு இருக்கிறது. இனிமேல் இது தொடரக்கூடாது என முடிவெடுத்த சிவகார்த்திகேயன், இனிமேல் பைனான்ஸ் வாங்காமல் படம் தயாரிக்கும் அளவுக்கு பணம் உள்ள தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் மட்டுமே நடிக்கவேண்டும் என முடிவெடுத்துள்ளாராம்.

அதன் விளைவுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், மற்றும் தெலுங்கும், தமிழ் என 2 மொழிகளில் படம் என களம் இறங்கியுள்ளார். அந்த தெலுங்கு படத்தை தயாரிப்பவர்களும் பல வருடங்களாக படம் எடுப்பவர்கள். பட ரிலீஸின்போது எந்த பிரச்சனையும் வராது. இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான் தயாரிப்பாளர்களை சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

பாவம் மனுஷன் எவ்வளவுதான் சமாளிப்பாரு!...

Next Story