
Cinema News
விஜய், அஜித் கூட செய்யாத சாதனை!.. தட்டி தூக்கிய டான் சிவகார்த்திகேயன்.!
தமிழ் சினிமாவில் தற்போது விறுவிறுவென வளர்ந்து வரும் நட்சத்திர ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். பலரும் சொல்வார்கள் சிவா சீக்கிரம் வளர்ந்துவிட்டார் என்றெல்லாம். ஆனால் உண்மையில், ரசிகர்ளுக்கு பிடித்தமான கதை தேர்விலும், அதற்காக தனது பணத்தை போட்டு எடுத்த அவரது ரிஸ்க்கிற்கும் கிடைத்து கொண்டிருக்கும் பரிசு தான் இந்த இடம் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அதனால் தான் விஜய் , அஜித் கூட செய்யாத சாதனையை சிவகார்த்திகேயன் அசால்டாக செய்து முடித்துள்ளார் என்று கூறவைத்துள்ளது. ஆம், விஜய், அஜித் ஆகியோர் படங்கள் கூட தற்போது தொடர்ந்து 100 கோடி வசூல் செய்து வந்தாலும்,
அவர்கள் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த பின்னர் அடுத்தடுத்த படங்கள் அந்த வசூலை உடனடியாக பெறவில்லை. விஜயின் துப்பாக்கி 100 கோடியை தாண்டியது. அதற்கடுத்ததாக தலைவா அந்த வசூலை பெறவில்லை. அதே போல அஜித்தின் மங்காத்தா 100 கோடி வசூல் பெற்றாலும் அடுத்ததாக வெளியான பில்லா 2 அந்த வெற்றியை பெற்றவில்லை.
இதையும் படியுங்களேன் – ஆள் இன் ஆள் அழகுராஜா முதல்., சாக்ரடீஸ் சவுண்ட்ஸ் வரை.! கவுண்டமணியின் களோபர லிஸ்ட் இதோ..,
ஆனால், தொடர்ந்து 100 கோடி படங்களை கொடுத்து சிவகார்த்திகேயன் அந்த சாதனையை அசால்டாக முடியடித்துள்ளாராம். டாக்டர் திரைப்படம் 25 நாளில் 100 கோடி வசூல் என்கிற சாதனையை பெற்றது. அதற்கடுத்ததாக அண்மையில் வெளியான டான் 12 நாளில் 100 கோடி வசூலை பெற்றுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.