Cinema News
டாக்டரால் மேலும் கடனில் சிக்கிய சிவகார்த்திகேயன்…. அடுத்தடுத்து விழும் அடி…..
ஒரு தாய் பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதும், ஒரு படத்தை எடுத்து அதை வெளியே கொண்டு வருவதும் ஒன்று என கூறுவார்கள். அது உண்மை தான். ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியே கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடித்தால் கூட படம் வெளியாகும் கடைசி நேரத்தில் படத்திற்கு தடை கோரி போர்க்கொடி பிடித்து விடுவார்கள்.
இதனால் தயாரிப்பாளர்களே பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு படத்தை தயாரிப்பது ரிஸ்க் என்று தெரிந்துதான் படத்தை தயாரிக்கிறார்கள். அப்படி தெரிந்தே நம்ம சிவகார்த்திகேயன் ரிஸ்க் எடுத்து தான் தற்போது கடனில் சிக்கி தவித்து வருகிறார். ஆரம்பத்தில் சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் சீமராஜா, ரெமோ, ஹீரோ போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க தொடங்கினார்.
அங்கு தான் பிரச்சனையே தொடங்கியது. இவர் நடிப்பில் வெளியான வேலைக்காரன், சீமராஜா, ரெமோ மற்றும் ஹீரோ ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியது. இதனால் சுமர் 70 கோடி ரூபாய் வரை கடனில் சிக்கினார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த கடனை அடைப்பதற்காக கே.ஜே.ஆர்.ராஜேஷுக்கு சம்பளம் வாங்காமல் சில படங்களை நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இந்த கடனே இன்னும் முடியவில்லை அதற்குள் மேலும் ஒரு கடனில் சிக்கி கொண்டாராம். அதாவது சிவகார்த்திகேயன் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஒன்றும் அவ்வளவு ஈஸியாக வெளியாகவில்லை. படம் மீது கடன் கொடுத்தவர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடி கொடுத்ததால், சிவகார்த்திகேயன் வேறு வழியில்லாமல் தரவேண்டிய 27 கோடியை தனது சம்பளத்தில் இருந்து பைனான்சியர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதன் பின்னரே டாக்டர் படம் வெளியாகி உள்ளது. இந்த தகவல் பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே கடன் பிரச்சனைகளை தீர்க்கதான் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படி ஒவ்வொரு படத்திலும் கடனாளியாகி வந்தால் எப்போதுதான் கடனை அடைப்பது என புலம்பி வருகிறாராம்.