சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் சினிமாவில் உச்சம் தொட்டவர். சில வருடங்களிலேயே தனக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த சீனியர் நடிகர்களை தாண்டிச் சென்றவர். சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பல நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள். இதை நடிகர் அஜித்தே ஒருமுறை சிவகார்த்திகேயனிடம் கூறியிருந்தார்..
தற்போது 50 முதல் 60 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதேநேரம் அவரின் மதராஸி மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது சிவகார்த்திகேயன் தாய் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அம்மா முத்து சூர்யா என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில்தான் இந்த படம் Hostel Hudugaru Bekagiddare என்கிற கன்னட படத்தின் ரிமேக் என சொல்லப்படுகிறது. கன்னடத்தில் இந்த படத்தில் காந்தாரா புகழ் ரிசப் செட்டி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த வேடத்தில்தான்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது..





