
Cinema News
அடுத்த பாக்ஸ் ஆபிஸ் ‘டான்’ SK தான்.! அடித்து நொறுக்கிய முதல் நாள் வசூல்..,
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களையும், கதைக்களங்களையும் தேர்வு செய்து அதில் ஹிட் கொடுத்து வருகிறார். இதன் மூலம் அடுத்தடுத்த மைல் கல்லை கடந்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வெற்றியை பதிவு செய்து வருகிறது.
இப்படம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் பட வசூல்களை காலி செய்து வருகிறது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகாமாக இருந்ததால், அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அதன் காரணமாக வசூலும் நல்ல விதமாக வந்து கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்களேன் – அடிப்பொலி.! இது வெறித்தனமான காம்பினேஷன்.! சிவகார்த்திகேயனின் புதிய பட இயக்குனர் இவரா?
இப்படம் தமிழகத்தில் மட்டும் , 9 கோடி வசூல் செய்துள்ளதாம். அதே போல வெளிமாநிலம், வெளிநாடு என சேர்த்து பார்த்தால் இந்த டான் திரைப்படம் 13 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது.
தனது ஒவ்வொரு படத்திலும், அடுத்ததடுத்த பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தரமான படக்கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால், நிச்சயம் வரும்காலத்தில் பாக்ஸ் ஆபிஸ் டான்-ஆக சிவகார்திகேயன் உருவெடுத்து விடுவார் என கூறப்படுகிறது.