’டான்' படத்தின் பின்னனியில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை...! வேற வழியில்லாமல் சிக்கிய சிவகார்த்திகேயன்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஐடி ரெய்டில் சிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த வகையில் சமீபத்தில் சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்புச் செழியன் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்தது. அந்த அளவுக்கு பணத்தை வாரி இறைக்கும் இவரின் வீட்டின் முன் தான் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தவமிருந்து வருகின்றனர்.
மதுரை அன்புச் செழியன் பிரபல சினிமா ஃபைனான்சியராக இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களுக்கு தேவையான பணம் முழுவதும் முக்கால் வாசி இவரிடம் தான் சென்று கொண்டிருக்கின்றன. வட்டிக்கு பணத்தை விட்டு கட்ட முடியாத தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நடிகைகளிடம் எப்படி பணத்தை வசூலிக்க முடியுமோ வசூலிக்கும் சூட்சமத்தை கையாளுபவர்.
மேலும் பணத்தை கட்ட முடியாத நடிகர்களிடம் வேறு மாதிரியான முறையில் வசூலிக்கக்கூடிய மதுரை அன்புச் செழியனிடம் மாட்டிக் கொண்டவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் அன்புச்செழியனிடம் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொள்ள அதை கட்ட முடியாமல் இருந்திருக்கிறார்.
அதை அறிந்த அன்புச்செழியன் லைக்கா புரொடக்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிவகார்த்திகேயனிடம் நீங்கள் எனக்கு தர வேண்டிய பணத்தை லைக்கா நிறுவனம் தந்து விடும். அதற்கு பதிலாக அந்த நிறுவனத்திற்கு நீங்கள் படம் பண்ணித்தர வேண்டும் என கூற அந்த வகையில் வெளியான படம் தான் ’டான்’ திரைப்படம். இந்த வழியை தான் அன்புச்செழியன் சமீபகாலமாக நடிகர்களிடம் பின்பற்றி வருகிறாராம்.