இதெல்லாம் நாங்க சிம்பு படத்துலேயே பார்த்துட்டோமே.! வேற கதை சொல்லுங்க சிவகார்த்திகேயன்.!

by Manikandan |
இதெல்லாம் நாங்க சிம்பு படத்துலேயே பார்த்துட்டோமே.! வேற கதை சொல்லுங்க சிவகார்த்திகேயன்.!
X

சிவகார்த்திகேயன், டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது நடிப்பில் ரிலீசாக உள்ள திரைப்படம் டான். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

don2

இப்படம் மார்ச் மாதம் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டது. ஆனால் அதே தேதியில் லைகா நிறுவனம் வெளியிடும் RRR திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தால் தற்போது டான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறடாடுகிறது. எப்படியும் டான் திரைப்படம் மே மாதம்தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை இதுதான் என்று இணையத்தில் ஒரு கதை உலா வருகிறது.

இதையும் படியுங்களேன் - சிவகார்த்திகேயனை ஹீரோவாக்குனது நான் தான்.! ஆனா அது அவருக்கே தெரியாது.!

அதாவது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக ஆசைப்படும் ஒரு ஹீரோ தன்னுடைய சினிமா வாழ்வில் எப்படி ஒரு இயக்குனராக வென்றாரா இல்லையா என்பது பற்றி படம் இருக்கும் என கூறப்படுகிறது. இது விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் சிம்புவின் கதாபாத்திரம் போல உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆனால் தான், அப்படத்தின் கதை என்னவென்று தெரியும். அப்படியே இரண்டு கைகளும் ஒன்றாக இருந்தாலும், அது கௌதம் மேனன் திரைப்படம். வேறு மாதிரியாக அவரது ஸ்டாலில் வெளியானது. இது சிவகார்த்திகேயன் திரைப்படம் காமெடி கலாட்டாவாக திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story