நீங்களே டான்னா இருங்க...எங்களுக்கு வேண்டாம் அந்த பட்டம்...சிவகார்த்திகேயனிடம் கூறிய அந்த பிரபலம்....!
நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை வெளியீட்டு விழா. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனிகபூர், படத்தின் நாயகன் உதய நிதி, நாயகி தான்யா, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் உதய நிதி போலீஸாக நடிக்கிறார். இந்த கதை ஹிந்தியில் பெரிய அளவு ஹிட் கொடுத்த ஆர்டிகிள் 15 என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்திற்கு உதய நிதி தான் பொருத்தமாக இருப்பார் என போனிகபூர் மிகவும் வேண்டுகோள் விடுத்து நடிக்க வைத்துள்ளாராம்.
மேடையில் எல்லாரும் படத்தின் அனுபவங்கள் பற்றி பேசினர். அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது அவரது டான் படத்தில் இருந்து ஆரம்பித்தார். டான்னா என்ன? வெறும் கத்தி, கம்பு வைச்சு சுத்துரவன் இல்ல, இந்தா மேடையில் பௌயமா உட்கார்த்திருக்கிறார் பாருங்க இவர் தான் உண்மையான டான் என உதய நிதியை குறிப்பிட்டு சொன்னார் சிவகார்த்திகேயன்.
அடுத்து உதய நிதி பேசும் போது சிவகார்த்திகேயனை பார்த்து ”அந்த டான் பட்டத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எனக்கெல்லாம் அந்த பட்டம் வேணாம்” என்று கூற மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.மேலும் அவர் கூறுகையில் கே.ஜி.எஃப் படம் வந்ததிலிருந்து தமிழ் சினிமாவில் அடுத்த டான் யார் என்று கேள்வி வந்து விட்டது. அந்த அளவுக்கு அந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என கூறினார்.