ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாவதுதான் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் அடுத்த விஜயாக ஆசைப்படுகிறார். அதனால்தான் விஜயின் கடைசி படம் என தெரிந்தும் அவர் படத்தோடு மோத நினைக்கிறார் என பலரும் கொளுத்தி போடுகிறார்கள்.
பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் திமுகவுக்கு நெருக்கமானவர் என்பதாலும் இந்த படத்தை வெளியிடுவது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதாலும் விஜய் அரசியலுக்கு வந்தது பிடிக்காமல் வேண்டுமென்றே அவரை பழிவாங்கவே ஜனநாயகன் படத்தோடு பராசக்தியை மோத விடுகிறார்கள்.. ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியாகும் போது ஜனநாயகனுக்கான தியேட்டர்கள் குறையும்.. அதனால் வசூலும் குறையும்..

எனவே திட்டமிட்டு இதை செய்திருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள். அதோடு ‘எங்க தளபதி கூடயே நீ மோதுவியா?’ என சிவகார்த்திகேயனை மோசமாக திட்டியும் வருகிறார்கள்.
நேற்று நடந்த பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் இது பற்றி சிவகார்த்திகேயன் விளக்கமும் அளித்தார். பராசக்தி பொங்கலுக்கு என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டோம். ஆனால் ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வருகிறது என்று அறிவித்தார்கள். வியாபாரம் காரணமாக தயாரிப்பாளரால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியவில்லை. இதை விஜய் சாரிடமும் தெரிவித்தோம். அவரும் தனக்கு எந்த பிரச்சினையும் என்று சொல்லியதோடு எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.. தேவையில்லாமல் இடையில் சிலர் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்’ என பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.
ஒருபக்கம் இதே விஜய் ரஜினியுடன் மோதவில்லையா?.. ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் 2005 ஏப்ரல் மாதம் வெளியானபோது விஜயின் சச்சின் படம் அதே தேதியில் வெளியானது.. விஜய் மட்டும் ரஜினியுடன் மோதலாம்.. ஆனால் சிவகார்த்திகேயன் விஜயுடன் மோதக் கூடாதா?.. இரண்டு படங்களும் வரட்டும்.. ரசிகர்களுக்கு பிடித்தால் இரண்டு படங்களும் நல்ல வசூலை பெறும்.. இதில் என்ன பிரச்சனை?’ என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள்.
