சிவகார்த்திகேயன் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா.?! 25 நாளுக்கு இவ்வளவுதானா.?!

தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நிலவரம் பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவ்வளவு பெரிய உயரத்திற்கு உண்மையில், சூர்யா, சிம்பு எல்லாம் வெகு வருடங்கள் காத்திருந்து பெற்ற உயரத்தை வெகு சீக்கிரமாகவே பெற்றுவிட்டார் என்றே கூற வேண்டும்.
இவ்வளவு சீக்கிரம் வந்தார் என்று மட்டுமே தெரியும் . ஆனால் அதற்கு முன்னரே தொலைக்காட்சி மூலம் மிகவும் பலமான அஸ்திவாரத்தை வெகு வருடங்களாக போட்டு வைத்துவிட்டார் என்பதே நிஜம். அதனால் தான் மக்களும் வெகு சீக்கிரமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அவர் முதன் முதலாக மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் சுமார் 25 நாட்கள் நடித்தாராம். அந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ் அவருக்கு வெறும் 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளாராம். இதனை சிவகார்த்திகேயன் ஒரு விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருப்பார்.
இதையும் படியுங்களேன் - சும்மா நெருப்பு மாறி இருக்கீங்க சார்.! ரசிகர்களை திக்குமுக்காட வைத்த விஜய்.!
தற்போது அவரது சம்பளம் முன்னணி நடிகர்களையே மிரளவைக்கிறது என்பதே நிஜம். அவருடைய படங்கள் எப்படியும் மின்மம் கியாரண்டி திரைப்படம். ரஜினி, விஜய் போல குழந்தைகள், குடும்பத்தை மிகவும் கவர்ந்துவிட்டார்.
அவருடைய நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கு கிட்டத்தட்ட 25 கோடிக்கு அருகில் தான் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.