உங்க ரேஞ்சுக்கு நீங்க காமெடியான நடிக்கலாமா.!? சிவகார்த்திகேயனை உசுப்பிவிட்ட 'அந்த' இயக்குனர்.!?

by Manikandan |
உங்க ரேஞ்சுக்கு நீங்க காமெடியான நடிக்கலாமா.!? சிவகார்த்திகேயனை உசுப்பிவிட்ட அந்த இயக்குனர்.!?
X

நடிகர் தனுஷ் நடிக்க , அப்போது அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 3. இந்த காதல் திரைப்படமாக உருவான இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் சிவகார்திகேகேயன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால், முதலில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானது சந்தானம். அதன் பிறகு சில காரணங்களால் அப்படத்தில் சந்தானம் நடிக்க முடியாமல் போனதாம். அதனால், சந்தானம் போல, விஜய் டிவியில் இருந்து பிரபலமான சிவகார்த்திகேயனை படக்குழு கமிட் செய்துள்ளது.

இதையும் படியுங்களேன் - நம்பாதீங்க தளபதி ரசிகர்களே.! இசை வெளியீட்டு விழா கிடையாதாம்.! வெளியான உறுதியான தகவல்.!

அந்த சமயம் தான் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடித்து வந்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்போது இயக்குனர் பாண்டிராஜிடம் , சார் தனுஷ் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க அழைகிறார்கள் நான் நடிக்க செல்கிறேன். உடனே அதற்கு மறுத்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

பாண்டிராஜ் , ' நீ ஹீரோவாக நடிக்க வேண்டியவன். அதனால் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் ' என கூறியுள்ளார். அவர் சொன்னது போல, 3 படத்தில் மட்டுமே காமெடியனாக நடித்து அதன் பின்னர் தொடர்ந்து ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Next Story