ஓவர் வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்!.. அந்த படம் தாமதமானதால் வந்த விளைவா?..

Published on: May 22, 2024
---Advertisement---

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் நடுவே சூரி பார்க்கவே இன்னமும் ஒல்லியாக தெரிந்தார். விஜய் சேதுபதி அளவுக்கு சிவகார்த்திகேயன் திடீரென வெயிட் போட்டு விட்டாரே என்ன காரணம் என ரசிகர்கள் கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திற்காக ரொம்பவே யங்காக மாறி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு சல்மான் கான் படத்தை இயக்க பாலிவுட்டுக்கு ஏஆர். முருகதாஸ் டாட்டா காட்டி விட்டு கிளம்பிவிட்டார்.

இதையும் படிங்க: நான் ஏன் அங்க போய் அவரை பாக்கணும்?!.. கோபப்பட்ட பாக்கியராஜ்.. இளையராஜாவை பிரிந்த பின்னணி!…

சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாக்கி வரும் சிக்கந்தர் படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது பிஸியாக உள்ள நிலையில் சிவகார்த்திகேயன் வீட்டில் தான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் தான் சூரி அழைத்ததும் கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார் என்கின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்த அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இன்னமும் அந்த படத்தை வெளியிடாமல் கமல்ஹாசன் தனது படங்களில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருவதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…

கல்கி மற்றும் இந்தியன் 2 என அடுத்தடுத்து கமல்ஹாசனின் படங்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வெளியாகின்றன. அமரன் படத்தின் டீசர் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னமும் அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ராஜ்கமல் நிறுவனம் அறிவிக்கவில்லை.

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்து வரும் நிலையில் அந்தப் படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், திடீரென சிவகார்த்திகேயனின் எடை கூடிவிட்டதாக கருடன் நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் படத்திற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறாரா சிவகார்த்திகேயன் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: Vishal: ஓடிடிக்கு ஓடி வந்த ரத்னம்… ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.