டான் படத்தின் போஸ்டரை பார்த்து கடுப்பான சிவகார்த்திகேயன்...! அதுக்கு அவர் என்ன பண்ணுவாரு...?
லைக்கா புரடக்ஷனில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் டான். இந்த படத்தில் பிரியங்கா மோகன் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா ஒரு ஸ்ட்ரிட்டான புரஃபஸராக நடிக்கிறார்.
மேலும் ஆர்.ஜே.விஜய், விலங்கு பட புகழ் பாலகிருஷ்ணன் மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.படத்தின் ஒரு பாடல் ஜலபுல ஜங் பாடல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் இசைத்துக் கொண்டிருக்கின்றது.
இப்படி இருக்க முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க படத்தின் போஸ்டர்களிலோ முழுவதும் சிவகார்த்தியனின் படம் தான் இருக்கின்றது.ஏன் என விசாரித்ததில் ஒரு கதையே சொன்னார்கள். படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிற நிலையில் திரையரங்குகளில் படத்தின் பேனர்கள் ரெடியாகி கொண்டிருந்தன. அப்போது சத்யம் தியேட்டரில் ஒரு போஸ்டரில் எஸ்.ஜே.சூர்யா படத்தை பெருசாகவும் அவர் பின்னாடி சிவகார்த்திகேயன் எட்டிபார்ப்பதை சிறியதாகவும் ரெடி பண்ணியுள்ளனர்.
அதை பார்த்து சிவகார்த்திகேயனுக்கு கண்கள் சிவந்து கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அதிலிருந்து புரோமோஷன் புகைப்படங்களில் இருந்து போஸ்டர் வரைக்கும் சிவகார்த்திகேயன் புகைப்படம் மட்டும் இருக்குமாறு மாற்றியுள்ளார். என்ன இருந்தாலும் இதே எஸ்.ஜே.சூர்யா தான் விஜய் விட சிவகார்த்திகேயனை தேடிதான் எல்லாரும் வராங்கனு பெருமையாக சொன்னார். நல்லதுக்கு காலம் இல்லாமல் போச்சே..