சிவகார்த்திகேயனால் தயாரிப்பாளருக்கு தலைவலி… இம்சை கொடுக்கும் சிம்பு மற்றும் தனுஷ்…

Kollywood: தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கும் நடிகர் சிலம்பரசன் மற்றும் தனுஷ் இருவரும் சமீபத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் மீது பொறாமை கொண்டு பேசி வரும் சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரபல இயக்குனர் டி ராஜேந்தரின் மகனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிலம்பரசன். அப்போதிலிருந்து தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்ததற்கு ரசிகர்கள் ஏராளம். தொடர்ச்சியாக ஹீரோவாகவும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்து வந்தார்.
திறமைகள் பல இருந்தும் அவருடைய அலட்சியமான நடவடிக்கையால் கோலிவுட்டில் தொடர்ச்சியாக அவரால் முன்னேற முடியாமல் பின் தங்கினார். இதில் அவருக்கு சில காதல் முறிவுகள் ஏற்பட நடிப்பிலிருந்து சில வருடங்கள் பிரேக் எடுத்த பின்னர் மாநாடு படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தினார்.
இவரை போலவே கஸ்தூரிராஜாவின் மகனாக துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தன்னுடைய அண்ணனால் அறிமுகம் செய்யப்பட்டவர் தனுஷ். முதல் சில ஆண்டுகள் அவர் மீது மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.
ஆனாலும் தன்னுடைய நடிப்பால் அதையெல்லாம் உடைத்து தனக்கென ஒரு கூட்டத்தையே உருவாக்கி விட்டார். தமிழை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் என அவருடைய படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. நடிகராக ஹிட் கொடுத்துவிட்ட தனுஷ் தற்போது இயக்குனராகவும் தன்னுடைய ஆட்டத்தை ஆடி வருகிறார்.
இதில் நடிகர் சிலம்பரசன் தன்னுடைய மாநாடு படத்திற்கு பின்னர் 8 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். நடிகர் தனுஷ் பல வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருக்கு 10 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்ததால் தன்னுடைய சம்பளத்தை 30 கோடி வரை உயர்த்தி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட தனுஷ் மற்றும் சிலம்பரசன் இருவரும் தங்களுக்கு 35 கோடி வரை சம்பளம் வேண்டும் என தயாரிப்பாளரை நிறுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது குறித்து தெரிவித்திருக்கும் திருப்பூர் சுப்ரமணியம், இப்போது வந்த சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய சம்பளம் கொடுக்கும் போது தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கும் எங்களுக்கு ஏன் குறைவாக கொடுக்கிறீர்கள் என கேட்கின்றனர்.
அவர் ஒரு ஹிட் படத்தை கொடுத்தால் நாங்கள் இரண்டு ஹிட் படத்தை கொடுக்கிறோம் என அவர்களால் சொல்ல முடியவில்லை எனவும் விமர்சித்திருக்கிறார்.