Connect with us

Cinema News

டாப் டக்கரு ஹிட் அடித்த டான்.. மனைவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ் ட்ரீட் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்த டான் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் முதல் படமே ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளிய நிலையில், படத்தை தயாரித்து நடித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டான் மிகப்பெரிய லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு பக்க பலமாக இருந்து வரும் அவரது மனைவி ஆர்த்திக்கு சிவகார்த்திகேயன் ஸ்பெஷலாக விருந்து ஒன்று கொடுத்துள்ளார்.

எஸ்கே புரொடக்ஷனின் இணை தயாரிப்பாளரான கலையரசு மற்றும் அவரது மனைவியும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி உடன் டான் வெற்றியை கொண்டாடும் விதமாக சொகுசு ஹோட்டல் ஒன்றுக்கு சென்று செம விருந்து சாப்பிட்டுள்ளனர்.

கலையரசு தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து, டான் படத்திற்கு எங்களை அல்லும் பகலும் வேலை பார்க்க முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்களுக்கு பக்க பலமாக இருந்த பெண்களுக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறோம் என பதிவிட்டு இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குகன் தாஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ள சிவகார்த்திகேயன் தன்னுடைய அப்பாவே வந்து பிறந்திருக்கிறார் என கொண்டாடி வருகிறார்.

சினிமாவில் தொடர்ந்து டாக்டர், டான் என சிவகார்த்திகேயனுக்கு வெற்றிகளும் குவிந்து வருகின்றன. விரைவில் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவாகி வரும் எஸ்கே 20, நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அயலான், உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top