Connect with us

சிவகார்த்திகேயனுக்கு ஜிம் பீஸ் கட்டிய தனுஷ்.! எப்படியெல்லாம் வளர்த்து விட்டுருக்கார் பாருங்க…

Cinema News

சிவகார்த்திகேயனுக்கு ஜிம் பீஸ் கட்டிய தனுஷ்.! எப்படியெல்லாம் வளர்த்து விட்டுருக்கார் பாருங்க…

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமை மூலம் இளம் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமல்லாமல் தனது நடிப்பு திறன் மூலம் தெரிந்து ஹிந்தி,தெலுங்கு,  ஹாலிவுட் வரை சென்றுவிட்டார்.

ஆரம்ப காலகட்டங்களில் தனுஷ், வுண்டர் பார் எனும் தயாரிப்பு நிறுவனம் அமைத்து, அதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்தார். அதன் மூலம் அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்னேஷ் சிவன் என பலருக்கும் புதிய பாதையை அமைத்து கொடுத்தார் என்றே கூறலாம்.

அதிலும், குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு முதலில் தனது படத்தில் காமெடியன் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அவர் திறமை அறிந்து கதாநாயகனாக மாற்றினார். எதிர்நீச்சல் திரைப்படம் மூலம் அவர் கதாநாயகனாகஅப்படத்தில் நடித்திருந்தார்.

 

அந்த சமயம் சிவகார்த்திகேயன் இன்னும் திறம்பட வளர வேண்டும் என்பதற்காக,  கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஜிம்மில் பணம் கட்டி தனுஷ் சிவகார்த்திகேயனை சேர்த்து விட்டாராம். சிவகார்த்திகேயனின் வீடு அப்போது வளசரவாக்கத்தில் இருந்ததாம். இருந்தும் தனுஷ் அங்கு சேர்த்து விட்டதற்காக தினமும் கொட்டிவாக்கத்தில் உள்ள அந்த உடற்பயிற்சி நிலையத்திற்கு சிவகார்த்திகேயன் வருவாராம்.

இதையும் படியுங்களேன் – அஜித்தின் சிட்டிசன் நாயகியை ஜோடியாக்க நினைத்த சிவகார்த்திகேயன்.. ச்ச ஜஸ்ட் மிஸ்…

சிவகார்த்திகேயனிடம் ஹீரோயின் திறமை இருக்கிறது என்பதை உணர்ந்த தனுஷ் அவர் மென்மேலும் வளர வேண்டும் என்பதற்காக பல உதவிகளை அந்த சமயம் செய்துள்ளாராம். இதனை அண்மையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியது இல்லை. தற்போது இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு தற்போது வெளியிடங்களில் கூட பேசிக்கொள்வதில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top