Cinema News
மரணபயத்த காட்டிட்டான் பரமா! ‘அமரன்’ படத்தால் பீதியில் இருக்கும் சிவகார்த்திகேயன்
அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி இருக்கிறது. கடந்த மாதம் 31ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக வெளியான திரைப்படம் தான் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவானது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வாழ்ந்திருந்தார்.
படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயனை ஒட்டுமொத்த ரசிகர்களும் திரையுலகமும் கொண்டாடியது .இன்றுவரை கொண்டாடி வருகிறது. நேற்று கூட ஆஃபீஸர் அகாடமி சார்பாக அங்குள்ள அதிகாரிகள் சிவகார்த்திகேயனை அழைத்து அவருக்கு மிகப்பெரிய கௌரவத்தை அளித்திருக்கிறது. இந்த படம் 300 கோடிக்கு அதிகமாக வசூலித்து இருக்கிறது.
இதையும் படிங்க: வேற லெவல்!.. எஸ்கே-வை கவுரவித்த ஆர்மி ஆபிஸர்ஸ்!.. அமரனாக கிடைத்த அங்கீகாரம்!..
இதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறிய விஷயங்கள் இதோ: இது சிவகார்த்திகேயனின் ஒரு பேஸ். இதை அவர் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவருடைய அடுத்த படமும் அமரன் பட வசூலை விட அதிகமாக இருக்க வேண்டும்.அமரன் திரைப்படம் எவ்வளவு வசூல் பெற்றதோ அதைவிட 10 கோடியாவது அதிகமாக அவருடைய அடுத்த படம் வசூலை பெற வேண்டும்.
அப்படி ஒரு பிரஷரில் தான் சிவகார்த்திகேயன் இப்போது இருக்கிறார். ஒருவேளை அடுத்த படம் அமரன் திரைப்படத்தின் வசூலை தாண்டவில்லை என்றால் என்ன சொல்வார்கள்? இது அமரன் படத்தின் வெற்றிதான். சிவகார்த்திகேயனின் வெற்றி இல்லை என்று சொல்வார்கள். அவருடைய அடுத்த படமும் அமரன் திரைப்படத்தை தாண்டிவிட்டால் சிவகார்த்திகேயனை 300 கோடி நடிகர் என அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அடுத்தடுத்து அவருடைய டார்கெட் 400 கோடி 500 கோடி என்ற அளவில் போய்விடும். அது அவருக்கு அடுத்து வரும் நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக சிவகார்த்திகேயன் மாறுவதற்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது. அதனால் இப்படி ஒரு பிரஷரில் தான் சிவகார்த்திகேயன் இப்போது இருக்கிறார் என தனஞ்செயன் கூறினார். அவர் கூறியதைப் போல சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் தான் தேர்ந்தெடுக்கும் படங்களையும் சரி இயக்குனர்களையும் சரி தயாரிப்பாளர்களையும் சரி மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் .
இதையும் படிங்க: எதிர்நீச்சல் நடிகர் பேத்தியின் திருமணம்!. அடேங்கப்பா இம்புட்டா!. உடம்பு முழுக்க தங்கம்தான்!
அவருடைய ஸ்ட்ராட்டஜியே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதனால் அவருடைய அடுத்தடுத்த படங்களும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுதா கொங்கரா, ஏ ஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ,வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி என அவருடைய அடுத்தடுத்த படங்களின் லைன் அப்கள் கேட்கவே பிரமிப்பாக இருக்கிறது.