பாட்டெழுத கறாரா காசு வாங்குவதற்கு இதுதான் காரணம்!...என்ன மனுஷன்யா சிவகார்த்திகேயன்!....
முன்பெல்லாம் பாடலாசிரியர்கள் மட்டுமே பாடல் எழுதுவார்கள். பின்னர் சில இயக்குனர்கள் பாடல்களை எழுத துவங்கினர். கடந்த சில வருடங்களாக நடிகர்களும் பாட்டெழுத துவங்கி விட்டனர். சிம்பு, தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயனும் பாடலை எழுதி வருகிறார்.
அவர் எழுதிய சில பாடல்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பாடல்களை எழுத துவங்கிவிட்டார். அவர் நடித்த டாக்டர் படத்தில் அவர் எழுதிய ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் அதிரி புதிரி ஹிட் ஆனது. எனவே, மற்ற நடிகர்கள் படத்திற்கும் அவரை பாடல் எழுத அழைக்கின்றனர். விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் கூட அரபிக்குத்து எனும் புதிய ஸ்டைலில் பாடலை எழுதியுள்ளார். இது தொடர்பான புரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் தான் எழுதும் பாடல்களுக்கான சம்பளத்தை கறாராக கேட்டு வாங்கிக் கொள்கிறாராம். பல கோடி சம்பளம் பெறும் அவர் சில லட்சங்களுக்கு ஏன் கறார் காட்டுகிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு அந்த பணத்தை அவர் கொடுத்துவிடுகிறாராம்.
இத்தனைக்கும் முத்துக்குமாருக்கும் ,சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருங்கிய நட்பு கூட கிடையாது. சிவகார்த்திகேயன் நடித்த மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய 2 படங்களில் 2 பாடல்களை முத்துக்குமார் எழுதியுள்ளார் அவ்வளவுதான். ஆனாலும், கஷ்டப்படும் முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு சிவகார்த்திகேயன் உதவ நினைப்பதை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.