இப்போ சிவகார்த்திகேயன் யாருனு தெரியுதா.? பிரபல இயக்குனரை அதிர வைத்த 'அந்த' பிளாஷ்பேக்...
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வரும் படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இவர் நடிப்பில் அடுத்ததாக மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் சூட்டிங் நேற்று பூஜையுடன் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். ஹீரோயினாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இந்த தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் இணையத்தில் துழாவி சூப்பரான தகவலை பகிர்ந்துள்ளனர்.
அதாவது, 2014ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது, ஒரு பிரபலமான டிவி நிகழ்ச்சியில் மிஸ்கின் கலந்துகொண்டார் அப்போது அவரிடம், ரஜினி, கமல்ஹாசன் என ஒவ்வொரு ஹீரோவை பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மிஷ்கின் அசராமல் பதில் அளித்து வந்தார். அப்போது சிவகார்த்திகேயன் பேரைச் சொன்னதும் அவரை எனக்கு தெரியாது என்று கூறிவிடுவார்.
இதையும் படியுங்களேன் - விஜயகாந்தை பார்த்ததும் வயதான பாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்... கலங்கிப்போன இயக்குனர் சமுத்திரக்கனி.!
இந்த தகவலை பகிர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் தான் மிஷ்கின் வில்லனாக நடிக்க உள்ளார் என்று பெருமையாக சிவகார்த்திகேயன் வளர்ச்சியை குறிப்பிட்டு சிலாகித்து வருகின்றனர் அவர்கள் ரசிகர்கள். உண்மையில் இந்த தகவலை கேள்விப்பட்டால் மிஷ்கின் கூட ஆச்சரியப்படுவார் என்றே கூறலாம்.