அமரன் வெற்றி!... பாலத்தில் அந்தர் பல்டி அடிக்கும் எஸ்கே?!... வைரல் வீடியோ!...

by ramya suresh |   ( Updated:2024-11-15 09:18:20  )
அமரன் வெற்றி!... பாலத்தில் அந்தர் பல்டி அடிக்கும் எஸ்கே?!... வைரல் வீடியோ!...
X

#image_title

எஸ்கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்திருந்தது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!…

மேலும் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி 16 நாட்களான நிலையில் 250 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகின்றது. விரைவில் இந்த திரைப்படம் 300 கோடியை நெருங்கிவிடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள்.

தொடர்ந்து இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அதிலும் கங்குவா திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் அமரன் திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகின்றது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.

தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை அடுத்து சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களை வைத்து தொடர் வெற்றிகளை கொடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வருவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் ஏ ஆர் முருகதாஸ் சல்மான்கானை வைத்து ஹிந்தியில் ஒரு திரைப்படத்தையும், தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 23 என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்நிலையில் எஸ்கே 23 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றது. சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் மேம்பாலத்தில் ஏறி சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையும் படிங்க:Kanguva: இந்தியன் 2-வுக்கு அடுத்து கங்குவாதான்!.. ஊற வச்சி ஒரு மாசம் அடிப்பாங்களே!….

இதில் மேம்பாலத்திலிருந்து குதிப்பதற்காக எஸ் கே கயிறு எல்லாம் கட்டி இருந்தார். சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது என்பதை தெரிந்த மக்கள் அங்கு கூடி விட்டார்கள். வாகன ஓட்டிகளும் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டு ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த காரணத்தால் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படமும் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story