Categories: latest news

உதவி செய்த நடிகர் கஷ்டப்பட்ட போது திமிர் காட்டிய சிவகார்த்திகேயன்!… வாய்ப்பு கேட்ட காசு கொடுத்த அதிர்ச்சி!…

Sivakarthikeyan: தமிழ் சினிமாக்கு டிவியில் இருந்து வந்து தற்போது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய சக டிவி நடிகர்களுக்கு உதவி செய்து இருக்காரா எனக் கேட்டால் அதுக்கு தற்போது ஒரு நடிகரே பதில் சொல்லி இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் வைரலாக அறியப்பட்டவர். அதை தொடர்ந்து மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொகுத்து வழங்கினார். கிட்டத்தட்ட விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ஆளாகவே இருந்தார். 

இதையும் படிங்க: போங்கப்பா நான் போக மாட்டேன்!.. யூ டர்ன் எடுத்த சரவண விக்ரம்!.. தேவையா ப்ரோ இதெல்லாம்?

திடீரென அவருக்கு 3 படத்தில் வாய்ப்பை தனுஷ் கொடுக்க வெள்ளித்திரைக்கு வந்தார். அந்த படத்தில் நல்ல ரீச் கொடுக்க தொடர்ந்து அவரை வைத்து எதிர்நீச்சல் படத்தினை தயாரிக்க அவரின் மார்க்கெட்டே உச்சம் அடைந்தது. கிட்டத்தட்ட அங்கு தொடங்கிய அவர் வளர்ச்சி இன்று தனுஷுக்கே போட்டியாக வந்து நிற்கிறார். ஆனால் அவர் வளர்ச்சியில் தனுஷின் பங்கு அதிகம் என்பது தான் உண்மை.

அப்படி சிவகார்த்திகேயன் தன்னுடன் டிவியில் நடத்தவர்களுக்கு எதுவும் வாய்ப்பு கொடுத்து வளர்த்து இருக்கிறாரா என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதை சமீபத்திய பேட்டியில் பிளாக் பாண்டி என்ற நடிகர் சொல்லி இருப்பது சிலருக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. 

அந்த பேட்டியில் இருந்து, நான் நிறைய ஈவெண்ட் செய்து வந்தேன். அப்போ சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் நான் அருண்ராஜ், சிவகார்த்திகேயனை என்னுடைய புரோகிராமில் ஒப்பந்தம் செய்தேன். அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கேன். அவரும் என்னுடைய தங்கை கல்யாணத்துக்கு ஹெல்ப் செய்தார்.

இதையும் படிங்க: ஷகீலா முழு போதையில் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்க!… வளர்ப்பு மகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

பின்னர், சிவா வளர்ந்த சமயத்தில் ஒரு சிக்கலில் இருந்தேன் நான். அவரை நடிகர் சங்கத்தில் பார்க்கும் போது உன்னை பார்க்கணும் எனக் கேட்டேன். ஆனால் அவர் மேனேஜரை அனுப்பி 20 ஆயிரம் கொடுத்து அனுப்பினார். நான் அதை மறுத்துவிட்டேன். காசாக கொடுத்தால் செலவு ஆகிவிடும்.

நடிக்கும் படங்களில் வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டுவிட்டேன். அம்மாவும் அதான் சொல்லினார்கள். ஆனால் கொடுத்த காசை மறுக்காமல் வெறும் 20 ரூபாயை மட்டும் வாங்கி வைத்து அனுப்பினார். ஆனால் அந்த மேனேஜர் என்ன சொன்னார் என்பது தெரியாது. அதுக்கு பின்னர் சிவா என்னிடம் பேசவே இல்லை.

நானும் அவருக்கு 3 கால் ஒருமுறை செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் நானும் பின்னர் அவரிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அருண்ராஜ் அடிக்கடி பேசுவார். ஆனால் வாய்ப்பு கேட்ட போது இருந்தால் சொல்கிறேன் என முடித்துவிடுவார் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இவர்தான்பா சூப்பர் ஹீரோ! சரித்திரம் படைத்த சமுத்திரக்கனியின் முத்தான மூன்று படங்கள்

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago