தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது அவரது நடிப்பில் பராசக்தி படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு பராசக்தி படம் மக்களை கவரவில்லை என்றுதான் சொல்லபடுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சம்பவம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம். அதை மையப்படுத்திதான் பராசக்தி படத்தை எடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் படத்தில் ஒரு சில இடங்களில் சித்தரிக்கப்பட்டவை என்று சில காட்சிகளை காட்டியிருக்கிறார்கள். இந்த வரலாற்றை தெரிந்தவர்கள் கூட பராசக்தி படத்தை பற்றி கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மிகவும் முக்கிய போராட்டக்காரர்களாக கருதப்பட்டவர்கள் பெரியார், வரதராசனார், நாகராசன், நடராசன், தாளமுத்து என இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இவர்களை பற்றி அந்தப் படத்தில் பெரிதாக காட்டவில்லை. சிவகார்த்திகேயன் இருப்பதால் அவரை ஒரு ஹீரோவாகவே அந்தப் படத்தில் காட்டியுள்ளனர். ரசிகர்களிடம் இந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பேசிய ஒரு பேச்சு இப்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் இனி அடுத்தடுத்த படங்களை ஒரு முழு என்டெர்டெயின் படமாகத்தான் தேர்ந்தெடுக்க போகிறாராம்.
ஏன் வெங்கட் பிரபு படம் கூட ஒரு ஜாலியான படமாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த முடிவுக்கு காரணம் கடந்த அவர் நடித்த மூன்று படங்களுமே சீரியஸான படங்களாக இருந்ததனால் இது போதும். இனி ஜாலியா ரசிகர்களை மகிழ்விக்கும் மாதிரியான படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.
இது நெட்டிசன்கள் கிண்டலாக பேசி வருகிறார்கள். சும்மாவே அடுத்த தளபதி என்று கூறியதிலிருந்து சிவகார்த்திகேயனை கைல புடிக்க முடியல. இதுல இவரின் இந்த பேச்சு ரஜினியை பாலோ செய்வதாக ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ரஜினியும் இதுவரை சீரியஸான ஆக்ஷன் படங்களையே செய்து விட்டோம். ஆரம்பத்தில் இருந்த மாதிரி ஒரு ஃபன் படத்தில் நடிக்கலாம் என்ற முடிவு எடுத்துதான் கமலுடன் இணைந்தார் ரஜினி.
ஆனால் ரஜினியை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களில்தான் நடித்தார். ஆனால் சிவகார்த்திகேயனோ அமரன், மதராஸி, பராசக்தி இந்த மூன்று படங்கள்தான் அவருக்கு சீரியஸான படங்கள். இந்த மூன்று படத்துக்கே இவ்ளோ பேச்சா என்று அவரை கிண்டலடித்து வருகின்றனர்.