சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு அம்மா மாதிரி.! 'விலங்கு' நடிகரின் நெகிழ்ச்சி அனுபவம்.!

by Manikandan |
sivakarthikeyan
X

விஜய் டிவியில் இருந்து பலர் சினிமா துறைக்குள் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் முன்னோடி என்றால் அது சந்தானம், சிவகார்த்திகேயன் தான். இவர்களை பார்த்து பலர் சினிமா துறைக்குள் வந்து பலர் ஜெயித்தும் இருக்கிறார்கள்.

அப்படி கானா காணும் காலங்களில் இருந்து சினிமா துறைக்குள் வந்தவர்களில் ஒருவர் தான் பால சரவணன். இவரை குட்டி புலி, திருடன் போலீஸ், ஈஸ்வரன் போன்ற பல படங்களில் பார்த்து இருப்போம். இருந்தும் ஒரு பெரிய கம்பேக்காக காத்திருந்தவருக்கு சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் நல்ல கம்பேக் காக அமைந்தது.

இதையும் படியுங்களேன் - எப்பேர்ப்பட்ட படத்தை எடுத்த இயக்குனர் இவர்.! இந்த போட்டோவ யாருமே எதிர்பார்கல.!

இந்த வெப் சீரிஸில் கருப்பு எனும் போலீசாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பால சரவணன். மேலும், அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து உள்ளார்.

இந்த மாணவன் கதாபாத்திரத்திற்காக 103 கிலோவில் இருந்து 80 கிலோவாக தனது எடையை குறைத்துள்ளார் பால சரவணன். இது குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், டான் படத்தில் மாணவன் காதாபாத்திரம் வந்ததால் தான் நான் உடல் எடையை குறைத்தேன். அது இல்லை என்றால் நான் உடல் எடையை குறைந்திருக்க மாட்டேன் .

மேலும் , சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் போது நான் என் அம்மாவுடன் இருப்பது போல உணர்கிறேன். என் அம்மா உடன் பேசும்போது எனக்கு என்ன உணர்வு ஏற்படுமோ அப்படிதான் அவருடன் இருக்கும் போதும் உணர்கிறேன். என உணர்ச்சிவசமாக கூறினார்.

Next Story