சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கின்றது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இதையும் படிங்க: அடேங்கப்பா!.. அமரன் படத்த விட டபுள் மடங்கு பட்ஜெட்டா?!.. மாஸாக தயாராகும் எஸ்கே25!…
அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்து மாபெரும் வெற்றி படமாக மாறி இருக்கின்றது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி தங்களது கதாபாத்திரங்களில் தத்ரூபமாக நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அமரன் திரைப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கின்றது.
தற்போது 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது. விரைவில் இப்படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வெற்றி விழா நடத்த இருப்பதாகவும், இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அமரன் திரைப்படத்திற்கு பிறகு வெளியான திரைப்படங்களால் அமரன் திரைப்படத்தின் மவுசு குறையாமல் இருந்து வருகின்றது. அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இதன் ஓடிடி ரிலீஸ் கூட தள்ளி வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் ராணுவ அதிகாரி உடையில் வந்து மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோவானது மிகவும் வைரலாகி வந்தது. இந்த வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் வேறு எந்த ஒரு நடிகர்களும் செய்திறாத ஒரு சாதனையை சிவகார்த்திகேயன் செய்திருக்கின்றார். தென்னிந்திய நடிகர்களிலேயே ஒரு நடிகர் பதிவிட்ட ஒரிஜினல் வீடியோவானது 100 கோடி பார்வையாளர்களை பெற்றது இதுவே முதன்முறை.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனக்கும் இந்த உறவுதான்… கொந்தளித்த மோகினி டே…
அமரன் திரைப்படத்திற்கு பிறகு இப்படி ஒரு சாதனையையும் நிகழ்த்தி காட்டி இருக்கின்றார் சிவகார்த்திகேயன். இந்த செய்தி தற்போது இணையதள பக்கங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வருடத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெரும் புகழையும் தொடர்ந்து பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இதற்கு அடுத்து அவர் சினிமாவில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
