“சிவகார்த்திகேயன் மாத்தி மாத்தி பேசுறார்”… சீண்டிப்பார்க்கும் பிரபல பத்திரிக்கையாளர்… ரொம்ப தைரியம்தான்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான “பிரின்ஸ்”, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆதலால் எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக வந்தது.
குறிப்பாக “பிரின்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. வணிக ரீதியாக “பிரின்ஸ்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்களால் “பிரின்ஸ்” திரைப்படத்திற்கு ரசிர்களின் வரவேற்பு குறைந்துபோனது.
இதனிடையே சிவகார்த்திகேயன் “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு பேட்டியில் “சீமராஜா” திரைப்படத்தின் தோல்வி குறித்து ஒரு கருத்தை பகிர்ந்திருந்தார். அதில் “நானும் இயக்குனர் பொன்ராமும் இணைந்து இதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறோம்.
ஆதலால் அத்திரைப்படங்களை விட சிறப்பான ஒன்றாக சீமராஜா இருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் அந்த திரைப்படத்தில் சீமராஜா கதாப்பாத்திரம் முதலில் கோழையாக இருந்து, அதன் பின் அவனது முன்னோர்களின் வீரத்தை கேள்விப்பட்டப் பிறகு சீமராஜாவும் ஒரு வீரனாக மாறும்படியான கதாப்பாத்திரமாக இருந்திருந்தால் திரைப்படம் நன்றாக வந்திருக்கும்” என மிகவும் வெளிப்படையாக கூறினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, சிவகார்த்திகேயன் குறித்து மிகவும் வெளிப்படையான ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.
“சீமராஜாவின் கதையை கெடுத்ததே சிவகார்த்திகேயன்தான். நான் கேள்விப்பட்ட வரை சீமராஜாவின் ஒரிஜினல் கதை என்னவென்றால், சீமராஜா என்ற கதாப்பாத்திரம் எந்த வம்புக்கும் போகாத கதாப்பாத்திரம். அவனது முன்னோர்களின் வீரம் பற்றி தெரியவரும்போது சீமராஜாவும் வீரனாக மாறுகிறான்.
இதையும் படிங்க: விநியோகஸ்தர்களை அலறவிடும் உதயநிதி… “அவுங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்”… பிரபல பத்திரிக்கையாளர் ஓப்பன் டாக்…
இதுதான் முதலில் சீமராஜாவின் கதையாக இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன், இப்படி ஒரு கதை இருந்தால் தனக்கு இன்ட்ரோ பாடல் இருக்காது எனவும் சண்டை காட்சிகள் இருக்காது எனவும் நினைத்து அந்த கதையில் தலையிட்டு தனக்கு ஏற்றார் போல் மாற்றினார். அதனால்தான் சீமராஜா தோல்வியடைந்தது. ஆனால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறும்போது, அப்படியே மாற்றி பேசுகிறார்” என சிவகார்த்திகேயன் மீது வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளார் பிஸ்மி.