எல்லாம் அந்த படத்தால வந்தது - சிவகார்த்திகேயனை சுற்றி வளைத்த ரெய்டு அதிகாரிகள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு பலம் வாய்ந்த ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராகவும் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக வலம் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் கமல் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் சிவகார்த்திகேயனை தற்போது வருமான வரித்துறை சுற்றி வளைத்திருக்கிறது.
அதாவது சிவகார்த்திகேயன் அலுவலகத்தில் ஜிஎஸ்டி ரெய்டு சமீபத்தில் நடந்ததாம். அந்த ரெய்டில் கிட்டத்தட்ட 56 கோடி தொகையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறதாம். அதனால் சிவகார்த்திகேயனை அதிகாரிகள் அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் விசாரித்திருக்கின்றனர்.
மேலும் இதற்குப் பின்னணியில் ஒரு சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டான். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சில பல பிரச்சனைகள் எழ மதுரை அன்புவிடம் பணம் கேட்டாராம் சிவகார்த்திகேயன்.
வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக அவருடைய தயாரிப்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாகவும் கூறி அந்த பணத்தை வாங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் அது சம்பந்தமாக அக்ரீமெண்ட் கையெழுத்தாகி இருக்கிறது.
அந்த சமயத்தில் மதுரை அன்பு பணம் கொடுப்பதிலும் சிவகார்த்திகேயன் பணம் வாங்கியதிலும் இருவருமே அதற்கான ஜிஎஸ்டி வரிகள் கட்டவில்லையாம். இது சம்பந்தமாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்களாம்.