பிரபல பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சிவகார்த்திகேயன்!!.. மாஸ் அப்டேட்டா இருக்கேப்பா…
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய்க்கு பிறகு பேமிலி ஆடியன்ஸை கைக்குள் வைத்திருக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். அதே போல் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை எனவும் சிவகார்த்திகேயனை கூறுவார்கள்.
அந்த அளவுக்கு ஒரு மாஸ் ஆடியன்ஸை தனது வசீகரமான நடிப்பின் மூலம் வளைத்துப்போட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். எனினும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “பிரின்ஸ்” திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
சிவகார்த்திகேயன் தற்போது மடோன்னே அஸ்வின் இயக்கி வரும் “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். மேலும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது தமிழில் “கஜினி”, “7 ஆம் அறிவு”, “துப்பாக்கி”, “கத்தி”, ஆகிய வெற்றித் திரைப்படங்களையும் ஹிந்தியில் “கஜினி”, “ஹாலிடே”, “அகிரா” ஆகிய திரைப்படங்களையும் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தின் பணிகள் முடிவடிந்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.