தலைவர் 171 படத்தில் அந்த நடிகர்!.. ஒருவழியா நடந்திடுச்சிப்பா!.. ஆசையை நிறைவேற்றிய லோகேஷ்..
Thalaivar 171: ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடிச்ச உற்சாகத்தில் விறுவிறுவென அடுத்த படங்களுக்கு தயாரானார் ரஜினி. மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் நடித்தார். அதன்பின் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்க துவங்கினார். இது அவரின் 170வது திரைப்படமாகும்.
ஒருபக்கம் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் ரஜினி நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு கதை எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லியோ படம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தன்னை நிரூபிக்கும் நிலையில் அவர் இருக்கிறார்.
இதையும் படிங்க: கிரேட் எஸ்கேப்!.. அஜர்பைஜானில் விடாமுயற்சி டீம் சந்தித்த பிரச்சனை.. அப்ப இதுதான் காரணமா
ரஜினி இப்போது ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கி இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்து கன்னியாகுமாரி, நாகர்கோவில் பகுதிகளில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது ரஜினி கமலை சந்தித்த புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகி வைரலாகியது.
இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்த போதிலிருந்தே ஒரு ரஜினி ரசிகன்தான்.
இதையும் படிங்க: ரஜினி – கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க
பல மேடைகளில் ரஜினியின் குரலில் பேசியிருக்கிறார். சினிமாவுக்கு வந்த பின் எப்படியாவது ரஜினியுடன் ஒரு படத்தில் ஒரு சின்ன வேடத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்துகொண்டே வந்தது. அவரின் நண்பர் நெல்சன் ஜெயிலர் படம் எடுத்தபோது ரஜினியின் மகனாக நடிக்க ஆசைப்பட்டார். ஆனால், ரஜினி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். தனது பல வருட ஆசை நிறைவேறியதில் சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். விக்ரம் படத்தில் சூர்யா வந்தது போல சிவகார்த்திகேயன் வருவாரா இல்லை டம்மி வேடமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் டைம் சொல்றேன்! இந்த வலி யாருக்கும் வரக் கூடாது – இயக்குனரால் நடுத்தெருவுக்கு வந்த பாலாஜி முருகதாஸ்