சூர்யாவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்.... அட அதுக்காக இல்லைங்க
கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே ஒரு நபர் என்றால் அது நடிகர் சூர்யா தான். ஒரே ஒரு படம் தான் வெளியானது. ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் சூர்யா டிரண்டாகி விட்டார். அதாங்க சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் சர்ச்சை பிரச்சனை. எவ்வளவு எதிர்ப்பு வருகிறதோ அதே அளவிற்கு சூர்யாவிற்கு ஆதரவும் குவிந்து வருகிறது.
ஒருபுறம் இந்த பிரச்சனை நடந்தாலும் மற்றொரு புறம் சூர்யா அவரது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் யுகபாரதியுடன் இணைந்து, நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதி இருந்த நிலையில் இப்படல் மாபெரும் வெற்றி பெற்றது.
அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தில் அவர் எழுதியுள்ள பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் மட்டுமல்லாமல் அவ்வப்போது பாடல்கள் எழுதுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். முதல் முறையாக சூர்யாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.