பிளாக் பஸ்டர் இயக்குனர் உடன் மீண்டும் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்..!!

by adminram |   ( Updated:2021-10-11 05:34:30  )
பிளாக் பஸ்டர் இயக்குனர் உடன் மீண்டும் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்..!!
X

நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் இசையில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துக் கொண்டு இருக்கும் ”டாக்டர்” படக் கூட்டணி மீண்டும் சேர்ந்து புதிய படம் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனின், தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், அனிருத் இசையில் நேற்று வெளியான இந்த படம் வசூல் வேட்டையைப் புரிந்து வருகிறது. முதல் நாளில் 6.50 கோடிக்கு மேல் வசூலை வாரி அள்ளி உள்ளது. நெல்சனின் முந்தைய படமான கோலமாவு கோகிலா போலவே டாக்டர் படமும் தாறுமாறான காமெடி, ஆக்‌ஷன், த்ரில்லர் என அனைவரும் வந்து பார்க்கும் வண்ணமாக அமைந்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் டாக்டர் படக் கூட்டணியில் படம் அமைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் இந்த கூட்டணி படம் எடுத்தால் நல்லா இருக்குமா? என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.

Next Story