தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார் என்றே கூறலாம். தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான், டாக்டர் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் தான் முந்திய காலகட்டத்தில் பாதை மாறி போய் விட்டதாகவும், இப்போது தெளிவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சிவகார்த்திகேயன் ” தமிழ் சினிமாவில் 10 ஹீரோ தான் 20 ஹீரோ தான் எப்போதுமே டாப் என்று பலர் கூறுவார்கள்.
இதையும் படியுங்களேன்- சமுத்திரக்கனி படத்துக்கு 150 கோடி பட்ஜெட்.?! நல்ல கதையை நாசம் பண்ணிராதீங்க…
அப்படியெல்லாம் இல்லை நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஹீரோவாக ஆகலாம். நான் ரஜினி சாருடைய மிக பெரிய ரசிகன். அவருடைய படங்கள், மற்றும் மற்ற படங்கள் வெளியானால் அதனை பார்த்துவிட்டு அந்த படங்களின் இயக்குனர், படத்தில் நடித்த நடிகர்களை கால் செய்து பாராட்டி விடுவேன்.
ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு காமெடி கதாபாத்திரங்கள் தான் செட் ஆகிறது என்று சொன்னார்கள். நான் அதிலிருந்து கொஞ்சம் மாறுவதற்காக சீரியஸான கதாபாத்திங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அங்க தான் கொஞ்சம் பாதை மாறி போய்ட்டேன். பிறகு மக்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து இப்போ தெளிவாகிட்டேன் என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் சொல்வது உண்மை தான் ஏனென்றால், தொடர்ந்து காமெடி கதையில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தேடுத்து நடித்தார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை பிறகு நல்ல குடும்பங்கள் கொண்டாடும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…