நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 9ம் தேதி வெளியான திரைப்படம் ‘டாக்டர்’.இப்படத்தில் யோகிபாபு, பிரியங்கா மோகன், வினய், தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் சிறப்பாக இருப்பதாக படத்தை பார்த்த பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். சிலர் இப்படத்தை டைம் பாஸ், ஆவரேஜ் எனக்கூறினாலும் படம் நன்றாக இல்லை என எவரும் கூறவில்லை. மேலும், 7 மாதங்களுக்கு பின் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாகி வருகிறது.

எனவே, ரசிகர்கள் பலரும் இப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படமாக இருந்தது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்,
இந்நிலையில், 5 வினாடியில் டாக்டர் பட விமர்சனம் என பதிவிட்டு நெட்டிசன் ஒருவர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு மிமிக்ரி நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றிருந்தார். அப்போது ரஜினி பேசுவதை போல ஒரு வசனத்தை அவர் பேசியிருந்தார். நீங்க எல்லாரும் போங்க. சந்தோஷமா இருங்க.. அத பார்த்து நான் சந்தோஷமா இருக்கேன்’ என ரஜினி ஸ்டைலில் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இதைப்பார்த்து. ஸ்மைலி இமேஜ்களை போட்டு Perfect என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்…
