சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட வில்லன் - ஒத்தக் கண்ண காட்டி மிரட்டியதை மறக்க முடியுமா?
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவிற்குள் நுழைந்த குறுகிய காலத்தில் ரஜினிக்கு அடுத்தபடியான ஒரு ஃபேமை தனக்குள் கொண்டு வந்து விட்டார் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய்க்கு எப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் நிறைந்து போயிருக்கின்றனர்.
தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டு வரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்
வரலாற்று பின்னணியை மையமாக வைத்து உருவாகி கொண்டுவரும் இந்த திரைப்படம் காஷ்மீரில் முக்கால்வாசி படப்பிடிப்பை நிறைவு செய்து தற்பொழுது தான் சென்னைக்கு திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்கள்.
அந்த ஆலோசனைக்கு தக்க பதில் கிடைத்ததை போல ஒரு வில்லனை தேடி பிடித்திருக்கிறார்கள் படக்குழு. ஹிந்தி நடிகரான ராகுல் போஸ் என்பவரை சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வைக்கிறார்களாம். ஹிந்தி நடிகராக இருந்தாலும் இவர் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.
ராகுல் போஸ் ஏற்கனவே கமல் நடித்த விஸ்வரூபம் 2 படத்தில் வில்லனாக நடித்தவர். அந்தப் படத்தில் கமல் யார் என்பதை தெரிந்து கொண்டு கமலை பழி வாங்கும் எண்ணத்தில் சென்னைக்கு வருவார். அந்த காட்சிகள் முழுவதும் ஒத்தக்கண்ணை மூடிக்கொண்டு தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராகுல் போஸ்.
இதையும் படிங்க : கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்
அவரைத்தான் இப்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். ராகுல் போஸ் தமிழில் நடிக்கும் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனின் படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.