சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் ரஜினியா....? அதுவும் ஓடல..இதாவது தப்பிக்குமா...?
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருகிறார். நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக என பன்முக கலைஞராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தன் அடுத்த புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடிக்கிறார். மேலும் இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படிங்கள் : தெரிஞ்ச ரூட்டை மாத்தி பல்பு வாங்கிய இயக்குனர்கள்… அஜித், விஜய், விக்ரம் எல்லாம் பாவம்.! ஆதாரம் இதோ…
இந்த படத்தின் தலைப்பு ஏற்கெனவே 1986ல் வெளியான ரஜினி பட தலைப்பான மாவீரன் என்ற தலைப்பையே பயன்படுத்தியுள்ளனர். அதனால் பல ரசிகர்கள் ரஜினியின் மாவீரன் படத்தில் தொடர்ச்சி எதாவது இருக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.
இதையும் படிங்கள் : நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…
ஆனால் ரஜினியின் மாவீரன் படமே சரியாக ஓடவில்லையாம். அப்படி இருக்கையில் அந்த படத்தின் தொடர்ச்சியை எப்படி சிவகார்த்திகேயன் படத்தில் பயன்படுத்துவார்கள். மேலும் ரஜினி எந்த கெட்டப்பில் வந்தாரோ அதே கெட்டப்பில் தான் சிவகார்த்திகேயனும் வருகிறாரே தவிர ரஜினியின் படக்கதையை பயன்படுத்தவில்லை. படத்தலைப்பை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் என கோடம்பாக்கத்தில் தெரிந்த சில வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.