எனக்கும் ஃபாரின் நடிகை வேணும்.. அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் ரொம்ப அரிதாகத்தான் திரைப்படங்களில் நடிக்க வெளிநாட்டிலிருந்து நடிகைகளை அழைத்து வருவார்கள். ஏ.எல். விஜய் இயக்கிய மதராஸ பட்டினம் படத்தில் நடிக்க லண்டனிலிருந்து எமி ஜாக்சனை அழைத்து வந்தார்கள். அதன்பின் அவர் பல படங்களில் நடித்தார். பாலிவுட் படங்களிலும் நடித்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு புதிய தெலுங்கு படத்திலும் ஒரு வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறார்களாம். அதுவும் எமி ஜாக்சன் போல அழகாக இருக்க வேண்டும் என அவரைப்போலவே ஒரு நடிகையை தேடி வருகிறார்களாம். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு வெளிநாட்டு பெண்ணுக்கும், நம்மூர் பையனுக்கும் இடையே காதல் வருவதுதான் இப்படத்தின் கதையாம்.
இது சிவகார்த்திகேயன் நடிக்கும் நேரடி தெலுங்கு படமாகும். சமீபகாலமாக தமிழ் நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில், பிரபாஸ், அல்லு அர்ஜூன் போன்ற நடிகர்களின் படங்கள் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அவர்கள் பேன் இண்டியா ஹீரோவாக மாறி வருகின்றனர்.
இந்த ஆசை தமிழ் நடிகர்களுக்கும் வந்துள்ளது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். அதேபோல், தனுஷும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இந்த பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.