80களில் கொடிகட்ட பறந்த சூப்பர் ஹிட் ஹீரோயினுக்கு பேருதவி செய்த சிவகார்த்திகேயன்.

by Manikandan |
80களில் கொடிகட்ட பறந்த சூப்பர் ஹிட் ஹீரோயினுக்கு பேருதவி செய்த சிவகார்த்திகேயன்.
X

சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் "மாவீரன்" எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளே படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிப்பதாக காலையிலேயே படகுழு அறிவித்து விட்டனர்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். அந்த பிரபலம் வேறு யாரும் இல்லை 1980- கால கட்டத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த புகழ் பெற்ற சரிதா தான். இவர் தான் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சி… மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்…

கிட்டத்தட்ட தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள். ஏனென்றால், இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு தான் கடைசியாக படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு பெரிதாக இவருக்கு எந்த பெரிய படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவேயில்லை. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் அவரை நடிக்கவைத்துள்ளதால் அடுத்ததாக தமிழில் சரிதாவுக்கு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவகார்த்திகேயன் செய்த இந்த செய்யலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், நடிகை சரிதா ரஜினியுடன் நெற்றிக்கண்,புது கவிதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story