அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்...! வெட்கத்தை விட்டு கேட்ட பிரபலம்...

by Rohini |
siva_main_cine
X

லைக்கா புரடக்‌ஷனில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் டிவி புகழ் சிவாங்கி, மனோபாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

siva1_cine

நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து வருகிற 13 ஆம் தேதி டான் படம் திரையரங்குகளில் வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று ரிலீஸ் ஆகிறது.

siva2_cine

இந்த செய்தியை சிவகார்த்திகேயன் படக்குழுவினரை டாக் செய்து டிவிட் செய்துள்ளார். ஆனால் அந்த ட்விட்டரில் படத்தில் நடித்த நடிகர்கள் பெயரெல்லாம் இருக்க நடிகர் மனோபாலா பெயர் மட்டும் இல்லை.

siva3_cine

இதை பார்த்த மனோபாலா கொஞ்சம் கடுப்பாகி எங்கப்பா என் பேரு? என பதில் ட்விட் செய்துள்ளார். அடுத்தடுத்து ஒரு சில கசப்பான சம்பவங்கள் படம் வெளிவருவதற்கு முன்பே நடக்கும் நிலையில் படம் வெளிவந்த பிறகு என்னவெல்லாம் நடக்குமோ? என திரை வட்டாரங்கள் புலம்பி வருகின்றனர்.

Next Story