என்னங்க? சிவகார்த்திகேயன் இப்படி வரிசையா அடி வாங்குறீங்க… அடுத்த பஞ்சாயத்தா இது?
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு சமீப காலமாக பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த லிஸ்டில் தற்போது பா.ரஞ்சித்திடம் ஒரு வம்பை இழுத்து வைத்திருக்கிறார்.
எந்த பிரச்சினைக்கும் செல்லாமல் கிசுகிசுக்கள் சிக்காமல் வளம் வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் கடந்த ஆண்டு இசையமைப்பாளர் டி இமான் தனக்கு அவர் துரோகம் செய்துவிட்டதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீது பல விஷயங்கள் கசிந்தது.
இதையும் படிங்க: ஆத்தாடி… இத்தனை மாசமா? கூலிக்காக ரஜினியையே இப்படியா படுத்துவீங்க லோகேஷ்..
தொடர்ச்சியாக, கொட்டுக்காளி படத்தின் விழாவில் நான் யாருக்கும் வாய்ப்பு கொடுத்து வாழ வைத்தேன் என சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். என்னை அப்படியே சொல்லி பழக்கி விட்டார்கள் என தனுஷை மறைமுகமாக தாக்கி பேசி இருப்பார். அந்த வீடியோ தனுஷ் ரசிகர்களிடம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் சிவகார்த்திகேயனின் பழைய வீடியோக்களை வெளியிட்டு தனுஷுக்கு ஆதரவாக அவர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், வாழை திரைப்படத்தின் விழா ஒன்றில் பா ரஞ்சித், பரியேறும் படங்களை பாராட்டி பேசும் பலர் கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களை விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. அவன் கஷ்டப்படுவதை காட்டும் போது ஏற்றுக் கொண்டு கைதட்டும் கூட்டம்.
இதையும் படிங்க: தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…
அவன் கர்ணனா நின்னு திருப்பி அடிப்பதை ஏற்றுக் கொள்ளாமல் வன்முறையை ஊக்கப்படுத்துவதாக பேசி இருப்பார். ஆனால் அவர் யாரையும் அதில் குறிப்பிட்டு இருக்க மாட்டார். இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் இந்த பேச்சின் பின்னணியை கண்டறிந்து விட்டனர். அதாவது, சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டி ஒன்று கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படங்கள் அடிதடி சண்டைக்காட்சிகளுடன் அமைந்திருக்கும்.
ஆனால், வாழை படத்தில் பரியேறும் பரிமாளை போல வாழ்வியல் ஒட்டியே படத்தினை எடுத்திருக்கிறார். இதுப்போல நிறைய வாழ்வியல் சம்மந்தப்பட்ட படங்கள் எடுக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறார். இரண்டு வீடியோக்களையும் பார்க்கும்போது பா ரஞ்சித் குறிப்பிட்டு பேசியது சிவகார்த்திகேயனை தான் இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் வீடியோக்களை வைரலாக பரப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவைக் காண: https://x.com/MaariBala_Offl/status/1826148473240170697