படம் ரீலீஸாகி 3 வருஷமாச்சி...சம்பளம் வரல...சிவகார்த்திகேயனுக்கு இப்படி நிலமையா?...

by சிவா |   ( Updated:2022-03-29 04:11:44  )
sivakarthikeyan
X

ஒரு திரைப்படத்தில் ஒரு சம்பளத்திற்கு ஒரு நடிகர் சம்மதித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு நடிக்கிறார் எனில் அப்படம் தோல்வியை சந்தித்தாலும் அந்த சம்பளத்தை முழுதாக தயாரிப்பாளர் கொடுத்துவிடுவார்கள். சில சமயம் ஹீரோவே படத்தின் வசூலை மனதில் கொண்டு சில கோடிகள் விட்டுக்கொடுப்பார். அது அவர்களின் பெருந்தன்மை.

sivakarthikeyan

நடிகர்களுக்கு முதலில் கொஞ்சம் பணமும், டப்பிங் பேசும் போது மிச்ச பணத்தையும் தயாரிப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள். மீது சம்பளத்தை கொடுக்கவில்லை எனில் டப்பிங் பேச வரமாட்டேன் என அடம் பிடிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

சில நடிகர்கள் முழு சம்பளத்தையும் முதலிலேயே வாங்கிக் கொள்வார்கள். அது ஹீரோவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள விஷயம். சில சமயம் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியும் அந்த நடிகருக்கு சம்பள பாக்கி இருக்கும். இதுதான் தற்போது சிவகார்த்திகேயனுக்கு நடந்துள்ளது.

mr local

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். நயன்தாரா இப்படத்தில் நடித்திருந்தார். ஆனாலும், இந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. 2019ம் வருடம் மே மாதம் இப்படம் வெளியானது.

gnanavel raja

இந்நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசியதாகவும், அதில் ரூ.4 கோடியை இன்னமும் தரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் வருகிற 31ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story