Connect with us

சீமராஜா படத்தின் வசூல் விவரத்தை கூறிய சிவகார்த்திகேயன்… என்னது இவளோ கோடியா?….

Cinema History

சீமராஜா படத்தின் வசூல் விவரத்தை கூறிய சிவகார்த்திகேயன்… என்னது இவளோ கோடியா?….

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.இந்தப் படத்தை ஆர்.டி.ராஜாவின் ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. சிவகார்த்திகேயனின் 12வது படம் இது.

நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ,முதல் முறையாக சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சூரி, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்து இருந்தார் .

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.இந்நிலையில், சீமராஜா திரைப்படம் படுதோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி ஷேர் வந்துள்ளதாம்.இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top