siva
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல் விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். மிகக்குறுகிய காலத்தில் ஒரு டாப் நடிகர் என்ற அந்தஸ்தை சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படக்கூடிய நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து வந்து இவ்வளவு குறுகிய காலத்தில் வெள்ளித்திரையையே ஆட்டிப்படைக்கும் நடிகராக வளர்ந்திருக்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பு தான் மிக முக்கிய காரணம்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21 வது படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்தப் படத்தில் ஒரு ஆர்மி ஆபீசராக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு பாதி நாட்கள் காஷ்மீரில் நடக்க காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையால் இப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த முடியவில்லை. அதனால் படக்குழு சென்னை திரும்பி விட்டது.
இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் பெரிய தாடி முடியுடன் ஒரு புதிய கெட்டப்பில் வலம் வருகிறார். அதனால் காஷ்மீரில் படப்பிடிப்பு ரத்தானதால் அந்த நாட்களில் வேறு ஏதாவது படத்தில் கமிட்டாகலாம் என்று நினைத்தால் அது முடியாது என்ற நிலையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏனெனில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆனால் இவர் இப்போது இருக்கும் தோற்றம் அந்த படத்திற்கு உகந்ததாக இருக்காது. அதனால் ராஜ்குமார் பெரியசாமி படத்திற்குண்டான தொடர்ச்சி விட்டுப் போகும் என்பதால் வேறு எந்த படத்திலும் கமிட்டாக முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க : ‘வாரிசு’ படத்தால பட்டது போதும்! ‘லியோ’ படத்தில் விஜய் போட்ட முதல் கண்டீசன்
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…