தமிழில் சூபப்ர் ஸ்டார் என்றால் அது விஜய்தான். தற்போது அவர் அரசியல் கட்சி துவங்கி முழு நேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். இவரது நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகன் வருகிற பொங்கலையொட்டி ஜனவ்ரி 9ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் , ஜெயம்ரவி,அதர்வா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படமும் 10ம் தேதி வெளியாகிரது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக் பேசப்பட்டு வருகிறது. விஜயுடன் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் போட்டியாக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜேசன் இயகத்தில் லைக்கா புரொடக்சன் தயாரிப்பில் சந்தீப் நாயகனக நடிக்கும் சிக்மா பட்த்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. ஆனல் அதே நேரமான 5 மணிக்கு சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பில் உருவாக உள்ள படத்தின் கிளிம்பஸ் வீடியோவும் வெளியானது. இந்த படத்தின் மர்ற விபரங்கள் நாளை வெளியாக உல்ள்து என்று கூறப்பட்டுள்ளது அந்த வீடியோவில்.
ஏற்கெனவே ஜனநாயகனோடு மோதும் சிவகார்த்திகேயன் தற்போது விஜய் மகன் இயக்கிய படத்தின் டீஸர் வெளியான நேரத்தில் தனது படத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் தந்தையுடன் மட்டுமல்ல மகனுடனும் போட்டி போடுகிறாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
