Categories: latest news

மாலையும் கழுத்துமாக போட்டோவில் சிக்கிய சிவகார்த்திகேயன்.! முழு விவரம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி தொடர்ந்து டான் மற்றும் அயலான் படத்திலும் நடித்து முடித்து இரண்டும் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது.

தற்போது, சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்போதைக்கு ‘SK20’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்,  இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இன்று காரைக்குடியில் பூஜையுடன் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும், 8 வருடன் கழித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு நடிகர் சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்களேன்-ஷூட்டிங்கை நிறுத்திய ரஜினி.! நள்ளிரவில் பயங்கர ஆர்ப்பாட்டம்.!

இந்த புதிய படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பணிகளை விரைந்து முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Published by
Manikandan