சிவகார்த்திகேயனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது அவரின் காமெடிதான். துவக்கம் முதலே பல படங்களிலும் காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்துதான் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற எல்லா படங்களிலுமே காமெடி தூக்கலாக இருக்கும்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களும்தான் சிவகார்த்திகேயனை நகர்ப்புற மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. சினிமாவில் இதை பி மற்றும் சி சென்டர் என சொல்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி ஹீரோயிம் செய்ய தொடங்கினார் சிவகார்த்திகேயன். அப்படி அவர் நடித்த ஹீரோ வேலைக்காரன், மதராஸி, பராசக்தி போன்ற படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமையவில்லை..
அவர் ஜாலியாக நடித்த டாக்டர், டான் போன்ற படங்கள்தான் அவருக்கு 100 கோடி வசூலை கொடுத்தது. ஆனாலும் ஆக்சன் படங்களில் நடித்தால்தான் மாஸ் ஹீரோவாக மாற முடியும் என முயற்சி செய்து வருகிறார். ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லை .இந்நிலையில்தான், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் பக்கா கிராமத்து காமெடி கதை என சொல்லப்படுகிறது..
தாய்க்கிழவி படத்தை இயக்கியுள்ள சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பழைய சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்கிறார்கள்.. முழுக்க காமெடி கலந்த ஜாலியான படமாக இந்த படம் உருவாக போகிறதாம்.. மிகவும் குறுகிய கால படமாக இரண்டு, மூன்று மாதங்களில் படத்தை முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். விரைவில் படப்பிடிப்பு மதுரையில் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அல்லது சந்தோஷ் நாராயணன் என இருவர்களில் யாரேனும் ஒருவர் இசையமைப்பார் எனத் தெரிகிறது.. இது சிவகார்த்திகேயனின் 26வது திரைப்படமாகும்.
கடந்த சில வருடங்களாகவே ‘நீங்கள் மீண்டும் காமெடி படங்களில் நடிக்க வேண்டும்’ என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் சிவகார்த்திகேயன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது..





