விஜயுடன் நடிக்க இருந்த பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்....!
யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். டாக்டர் டான் என இவரது நடிப்பில் வெளியான அடுத்தடுத்த இரண்டு படங்களும் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்ததால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது.
இப்போதெல்லாம் சிவகார்த்திகேயன் அவரது படங்களில் டாப் நடிகைகளை மட்டுமே புக் செய்து வருகிறார். அதன்படி, தற்போது அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 படத்தில் உக்ரைன் நாயகி ஒருவர் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடிக்க உள்ள சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். அதேபோல் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்கே 22 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளாராம்.
ஆம் பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி தான் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க இருந்தது.
ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அது முடியாமல் போனது. அதனை தொடர்ந்து தளபதி 66 படத்தில் கியாரா நடிப்பதாக இருந்தது. ஆனால் அதுவும் நடைபெறாத நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் கியாரா தமிழில் அறிமுகமாக உள்ளார்.