சிவகார்த்திகேயனின் புது ஹீரோயின் பெயரை சரியாக சொன்னால் பரிசு கொடுப்பாங்க போல.!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் அடுத்து என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்துள்ளார் என்றே கூறவேண்டும்.
அவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் டான். இந்த திரைப்படம் இம்மாதம் வெளியாக போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சில காரணங்களால் மே மாதம் டான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அயலான் படத்தின் சூட்டிங் வேலைகளிலும் சிவகார்த்திகேயன் ஆரம்பித்து உள்ளாராம். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படமான தெலுங்கு இயக்குனர் இயக்கும் திரைப்படத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளாராம்.
இதையும் படியுங்களேன் - நீ அந்த பக்கம் போறீயா? நான் இந்த பக்கம் போறேன்.! வேண்டாத வேலையெல்லம் சரியாக செய்யும் சந்தானம்.!
இந்த படத்தில் நடிக்க வெளிநாட்டு ஹீரோயினை களமிறக்க படக்குழு முயற்சி செய்து அதற்கான ஹீரோயின் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தது. தற்போது ஒரு ஹீரோயினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.
மரிய ரியாபோ ஷக்கா, இதுதான் அவருடைய பெயர் இந்த பெயரை சரியாக சொன்னால் பரிசு கொடுப்பார்கள் போல அந்த அளவுக்கு ஹீரோயின் பெயர் வாயில் நுழையாதபடியும், மனதில் நிற்காதபடியும் இருக்கிறது. படத்தில் அவரது நடிப்பை பார்த்து தான் அவரது பெயரை நினைவில் கொள்ளவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
அதற்கடுத்து தான் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படம், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படம் என பிஸியாக இயங்க உள்ளார் சிவகார்த்திகேயன்.