உங்க கஞ்சத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா.?! எதிர்பார்த்து ஏமாந்து போன சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பிரின்ஸ். இத் திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் சில காரணங்களால் தீபாவளிக்கு பிரின்ஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் மோத உள்ளன. பிரின்ஸ் திரைப்படத்தின் சூட்டிங் காட்சிகள் சிலவை முடியாமல் இருந்ததுதான் இதற்கு காரணமாம்.
இந்த படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் நடப்பது போல இருக்குமாம். ஆதலால் வெளிநாட்டில் சூட்டிங் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு சற்று ஏமாற்றமே கிடைத்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன் - நன்றி மறந்த ரஜினி மகள்.? நண்பர் தனுஷுக்காக அதனை நீங்க செஞ்சிருக்கலாம்.. வருத்தத்தில் ரசிகர்கள்...
படத்தின் இயக்குனர் மிகவும் சிக்கனமாக படத்தை எடுத்துக் கொடுத்து முடிப்பவர். ஆதலால் வெளிநாடு எல்லாம் செல்லாமல் உள்ளூரிலேயே வெளிநாடு போல செட் அமைத்து, அதனை வெளிநாடு போல காட்ட முயற்சித்துள்ளாராம்.
இதனால் தற்போது சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருக்கிறாராம். இப்படி ஷூட்டிங் செய்தால் படத்தின் தரம் எப்படி இருக்குமோ என்று கொஞ்சம் கலக்கத்தில் இருக்கின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.