கோலிவுட்டில் மடமடவென வளர்ந்து வரும் இளம் நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர அயலான் படமும் இறுதிகட்ட பணிகளில் உள்ளது.
இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை என்ற படத்திலும், தெலுங்குப்பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அனுதீப் இயக்கும் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு சுமார் 25 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ராஷ்மிகாவிற்கு தற்போது தெலுங்கில் நல்ல மார்க்கெட் நிலவி வருவதால் அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் தற்போது சிவகார்த்திகேயன் மார்க்கெட் டாப்பில் இருப்பதால் தயாரிப்பாளர்களும் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளார்களாம். இனி சிவகார்த்திகேயன் காட்டுல அடைமழை தான்
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…