நல்லா தான் போய்டு இருந்துச்சு… சிவகார்த்திகேயனை வளைத்த அந்த இயக்குனர்… ஹீரோயின் தான் ஹைலைட்டே!...

by Akhilan |
நல்லா தான் போய்டு இருந்துச்சு… சிவகார்த்திகேயனை வளைத்த அந்த இயக்குனர்… ஹீரோயின் தான் ஹைலைட்டே!...
X

Sivakarthikeyan: தமிழ் சினிமாவின் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கான அப்டேட் கசிந்து இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஆதிக்கத்தினை கோலிவுட்டில் செலுத்த தொடங்கி இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான அயலான் சுமார் வசூலை பெற்றாலும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தொடர்ந்து தற்போது கைவசம் சில படங்களை வைத்திருக்கிறார். அதில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. பொற்காலம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிஜுமேனன் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் எஸ்.பி.பி. ரொம்பவே சூப்பர்… பாடகி சித்ரா கொடுக்கும் சர்டிபிகேட் இதுதான்..!

அனிருத் படத்தில் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பு அடுத்த உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

நடிகை சாய் பல்லவி படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் உருவாகி வருவதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் படத்தின் முக்கிய அறிவிப்புகள் கசிந்து இருக்கிறது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!…

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். பாஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. டான் படத்திற்கு பின்னர் இக்கூட்டணி இணைய இருக்கிறது. டான் படமும் சுமார் வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில் இந்த ஜோடி இந்த படத்திலாவது ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றனர்.

Next Story