அமரன் திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பின் சினிமாவில் சிவகார்த்திகேயனின் கிராப் மேலே ஏறி இருக்கிறது. தனது சம்பளத்தையும் அவர் ஏற்றிவிட்டார். ஏனெனில் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தொட்டது. அதன்பின் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் உங்களை முன்னிட்டு 2026 ஜனவரி மாதம் ஜனநாயகன் படத்தோடு வெளியாகிறது.
ஒருபக்கம் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். அவரின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகும். கோட் படத்துக்கு விஜயை அமெரிக்கா கூட்டிக்கொண்டு போனது போலவே சமீபத்தில் சிவகார்த்திகேயன் கூட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு போனார் வெங்கட் பிரபு. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில்தான் இந்த படத்தின் பட்ஜெட் 180 கோடி என்பது தெரிய வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்ததிலேயே இதுதான் அதிகமான பட்ஜெட். சிவகார்த்திகேயனுக்கு 45 கோடி சம்பளம், வெங்கட் பிரபுவுக்கு 18 கோடி, அனிருத்துக்கு 12 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 25 கோடி என சம்பளமே 100 கோடி வருகிறதாம். அதோடு, படத்தின் மேக்கிங் செலவு 50 கோடி என்கிறார்கள். ஏனெனில் இந்த படத்தின் பாதி சூட்டிங் வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாம். அதோடு பணத்திற்கான வட்டி 30 கோடி என எல்லாம் சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 180 கோடி வருகிறது. இது அதிக ரிஸ்க் என்கிறார்கள்கள் சினிமா உலகினர்.
அமரன் படத்தின் ஓடிடி உரிமை 45 கோடிக்கு மேல் விலை போனதால், இந்த செலவை சமாளித்து விடலாம் என நினைக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதே நேரம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தால் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
